குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஜாம் வகைகள்
ஜாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று.. பழங்கள் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஜாம் செய்து கொடுத்து பாருங்கள்.. முதலில் மாம்பழம் வைத்து எப்படி ஜாம் செய்வது என்று பதிவு செய்கிறேன்..
மாம்பழ ஜாம்
தேவையான பொருட்கள்
மாம்பழம் பழுத்தது - 3-4 எண்ணிக்கை
சீனி - 125 கிராம்
எலுமிச்சை சாறு - 2டீஸ்பூன்
செய்முறை
1 . மாம்பழங்களை சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அடித்து வைத்துக் கொள்ளவும்..
2. அடி கனமான பாத்திரத்தில் அரைத்த விழுதை சேர்க்கவும்.. பின்னர் சீனியை போட்டு நன்றாக கலந்து கொதிக்க விடவும்..
3. பத்து நிமிடத்துக்கு ஒரு முறை கிளறி விடவும்...
4. 20-25 நிமிடங்கள் கழித்து பதம் (ஒரு சிறிய தட்டில் ஒரு கரண்டி எடுத்து தட்டை லேசாக சரித்தால் ஓடாமல் இருக்கும்)வந்ததும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொதிக்க வைத்து பின் இறக்கவும்...
சுவையான மாம்பழ ஜாம் தயார்..
இதை 3 மாதங்கள் வரை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்..
தக்காளி ஜாம்
தேவையான பொருட்கள்
தக்காளி. - 1/2 கிலோ
சீனி - 250 கிராம்
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டியளவு
செய்முறை
1. தக்காளியை நன்றாக வேக வைத்துக் தோலுரித்து வைத்துக் கொள்ளவும்..
2. அதை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி வைக்கவும்..
3. பின்னர் அடி கனமான பாத்திரத்தில் அரைத்த விழுதை சேர்த்து அதன் பிறகு சீனியை போட்டு நன்றாக கலந்து கொதிக்க விடவும்..
4. சரியான பதம் வந்ததும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து இறக்கவும்..
5. நிறம் மாறி அழகான நிறத்தில் இருக்கும்..
6. ஆறியதும் பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும்..
தக்காளி ஜாம் தயார்..
பீட்ரூட் ஜாம்
தேவையான பொருட்கள்
பீட்ரூட். - 4-5 சிறியது
சீனி - 100 கிராம்
நெய் - 1 தேக்கரண்டியளவு
செய்முறை
1. ஒரு கடாயில் நெய் விட்டு துருவிய பீட்ரூட் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்...
2. பின்னர் அதை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்..
3. கடாயில் அரைத்த விழுதை சேர்த்து அதன் பிறகு சீனியை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்..
4. நன்றாக வெந்ததும் பதம் பார்த்து இறக்கவும்...
5. இதை சேர்த்து வைத்து பயன்படுத்த முடியாது...
சுவையான ஜாம் தயார்..
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்
முயற்சி செய்து பாருங்கள்..