வீட்டில் செய்யக்கூடிய வயிற்று வலிக்கான எளிய மருந்து

Bharathi
2 min readJul 4, 2021

--

உடல் சூட்டினால் ஏற்படும் வயிறு வலி, ஏதேனும் உணவு ஒவ்வாமை, வயிற்றுப் போக்கு இந்த மாதிரி உபாதைகள் வரும் போது இந்த மருந்து நிச்சயமாக கைக் கொடுக்கும். அதேபோல் பசியின்மை, செரிமான தொல்லைகள் இவற்றிற்கு இதனுடன் ஒரு பல் பூண்டு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். சில பேருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டால் நிக்காமல் போய்க் கொண்டே இருக்கும். இந்த மாதிரி அடிக்கடி வயிற்று பிரச்சனைகளால் பாதிக்கப்படும் நபர்கள் மூன்று நாட்கள் ஒரு முறை இந்த மருந்தை எடுத்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

ஓமம் - 2 தேக்கரண்டியளவு

சீரகம் - 2 தேக்கரண்டியளவு

காயம் - 1 துண்டு

செய்முறை:

ஒரு வாணலி எடுத்து நன்றாக சூடுபடுத்தி, ஓமம் சீரகம் இரண்டையும் சேர்த்து பொரிய விட்டு, காயம் சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி 1/2 டம்ளர் ஆகும் வரை கொதிக்க விடவும். வற்றிய பின்னர் வடிகட்டி பருகவும்.

குறிப்பு:

1-3 வயது - 1/2 - 1 சங்கு

3-7 வயது - 2-3 சங்கு

7-11வயது - 1/4 டம்ளர்

பெரியவர்கள் - 1/2 டம்ளர்

இது தவிர இன்னும் ஒரு சில மருந்துகள் உள்ளன. இதோ உங்களுக்கான குறிப்புகள்
1. எலுமிச்சை ஜூஸ்

வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சை ஜூஸை கலந்து பருகினால் வயிற்று வலியை நீக்க உதவும். அரை எலுமிச்சை பழத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் பிழிந்து, அதனை நன்றாக கலக்கி, பின் குடிக்கவும்.

2. நல்லெண்ணெய்

நல்லெண்ணெய் தொப்புள் குழியில் போட்டால் சூட்டினால் ஏற்படும் வயிறு வலி குறையும்.

3. காய தண்ணீர்

சூடான தண்ணீரில் காயம் பொடி சேர்த்து கலந்து குடித்தால் வாயுத்தொல்லைக்கு உடனே தீர்வு கிடைக்கும்.

4. மோர் உடன் ஒரு துண்டு இஞ்சி மற்றும் காயம் சேர்த்து கலந்து குடித்தால் வயிற்று வலியைப் போக்கும். இது அல்சர் இருந்தால் இஞ்சி சேர்க்காமல் பருகவும்.

உங்களுக்கு வயிற்று போக்கு இருந்தால் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடலின் சீரான செயல்பாட்டிற்கு நீங்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதை முயற்சி செய்து பாருங்கள் கண்டிப்பாக சரியாகும்... இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் Like பண்ணுங்க share பண்ணுங்க.. அடுத்த பதிவில் பார்ப்போம்.... Take care friends... Eat healthy.

--

--

No responses yet